2025 ஜூலை 31, வியாழக்கிழமை

WhatsApp மோசடிகள்; பொதுமக்கள் அவதானம்

S.Renuka   / 2025 ஜூலை 30 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்து, அவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்யும் மோசடி முயற்சிகள் குறித்து தற்போது ஏராளமான புகார்கள் பதிவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது.

மோசடி செய்பவர்கள் பயனர்களை ஏமாற்றி, அவர்களின் வாட்ஸ்அப் ஒன்-டைம் கடவுச்சொல் (OTP) எண்களை வெளிப்படுத்தி, பின்னர் போலி செய்திகளை அனுப்பப் பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்த மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்லைன் கணக்குகளுக்கான OTP எண்களை எந்த சூழ்நிலையிலும் யாருடனும் பகிரக்கூடாது என்றும் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .