Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2024 ஜூலை 14 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.பி.கபில
நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்கு ஒன்றின் பிரதிவாதியை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதவானின் கையொப்பத்தையும் போலியாக இட்டு, வழக்கு அறிக்கையையும் பெற்றுக்கொடுத்து, 35 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் ஞாயிற்றுக்கிழமை (14) காலை கைது செய்யப்பட்ட இந்த நபர், நீதிமன்றத்தின் முன்னாள் சேவையாளர் ஆவார்.
அவர், வெலிசர நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியவர், இவ்வாறான தவறான மோசடிகளைச் செய்து வேலையிழந்து சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் புதுக்கடை மேல் நீதிமன்றத்தில் தோலுக்கு முதலாளி என தெரிவித்தே இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
வென்னப்புவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட நபருக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விமான பயணத்தடையை நீக்குவதற்காக, இவ்வாறு போலியான ஆவணங்கள், வழக்கு ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், தனது போக்குவரத்து தடை நீக்கப்படாமை தொடர்பில், வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர், நீர்கொழும்பு நீதிமன்றத்தின் பதிவாளரை சந்தித்து கேட்றிந்துள்ளார். அதன்போதே, தான் வைத்திருக்கும் வழக்கு ஆவணங்கள் போலியானவை என்றும், நீதவானின் கையொப்பமும் போலியானது என்பதும் கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் மேற்படி நபரை கைது செய்வதற்காக, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணை பெற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், தன்னுடைய வதிவிடங்களை மாற்றிக்கொண்டே இருந்த மேற்படி நபர், பொலிஸில் சிக்கிக்கொள்ளாது இருந்துள்ளார்.
அவர், வத்தளை, ஹெந்தலை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தன்னுடைய மனைவியுடன் மறைந்து வாழ்ந்துள்ளார். அங்கிருந்து, ஞாயிற்றுக்கிழமை (14) காலை தப்பியோடுவதற்காக, தன்னுடைய பொருட்களை அடுக்குமாடியின் கீழ் தளத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இவை தொடர்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மனைவியையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்விருவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago