2024 மே 26, ஞாயிற்றுக்கிழமை

பிரமிட்டில் ரூ.500 கோடி மோசடி; பஸ்நாயக்க, நடிகைக்கு விளக்கமறியல்

Editorial   / 2024 ஜனவரி 28 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘டிரேட்வின்’ எனும் பெயரில் பிரமிட் முறைமையின் ஊடாக வர்த்தக நடவடிக்கையை முன்னெடுத்து, அதில் பணத்தை வைப்பிலிடும் வைப்பாளர்களின் பணத்தில் 500 கோடி ரூபாவை மோசடி செய்தார என்றக் குற்றஞ்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் வலையமைப்பு விசாரணைப் பிரிவினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிலிமத்தலாவை பிரதேசத்தில் மறைந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டார் என்று அந்த வலையமைப்பின் விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

சந்தேகநபர் பட்டத்தாரி ஆசிரியராக இருந்துள்ளார். அத்துடன் தென் மாகாணத்தில் உள்ள பிரதான விஹாரை ஒன்றில் பஸ்நாயக்க நிலமேயாகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தரிந்து ஈரோஸ் வீரசேகர கஹடகஸ்திகிலிய நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (28) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை   எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கஹடகஸ்திகிலிய பதில் நீதவான்   திமுத்து உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .