Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 20 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இன்று (20) நிறைவேற்றப்படும் தீர்மானம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியதாய் இருக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இலங்கை, 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த போது, பிரித்தானியா தவறிழைத்துவிட்டதென, பிரித்தானியாவுக்கு எதிராகக் கையை நீட்டினார்.
யார், யார் பாதிக்கப்பட்டுள்ளனரோ, அவர்களுக்குத் தான் வலி தெரியும். அவ்வாறானவர்களுக்குத்தான் அதன் பெறுமதித் தெரியும். இந்நிலையில், கிளிநொச்சியில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. “மறப்போம்”, “மன்னிப்போம்” எனக் கூறியுள்ளார். அதனை, வன்மையாக தான் கண்டிக்கின்றேன் என்றார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஐ.நா மனித உரிமை பேரவையில் நாளை (இன்று) இலங்கை தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானத்தின் ஊடாகவே, இலங்கையில் என்ன நடந்ததென்பதை அறிந்துகொள்ளமுடியும். சர்வதேச நீதிமன்றத்தை நிறுவி, சர்வதேச நீதிபதிகளை கொண்டுவந்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், என்ன நடந்ததென்பதை இந்த அரசாங்கத்தின் நிறுவனம் கண்டறியாது என்பது எனது கருத்தாகும் என்றார்.
ஐ.நா, அழுத்தத்தால், இந்த அரசாங்கம் தீர்மானமொன்றை எடுக்கவேண்டும். நாளைய (இன்று) தீர்மானமும் அவ்வாறானதாகவே இருக்கவேண்டும். ஐ.நா மனித உரிமை பேரவைக்கு, பிரித்தானியா யோசனையொன்றை கொண்டுவந்திருக்கின்றது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். எனினும், அதனூடாக, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
தமிழ் மக்களின் வடக்கு-கிழக்கு பிரதேசத்தை தனி அலகாக, பிரித்தானியாக, 1948 ஆண்டே சட்டவரைபை செய்திருந்தால், தமிழர்கள் அடக்கப்பட்டிருக்கமாட்டார்கள், யுத்தம் இடம்பெற்றிருக்காது, யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றிருக்காது, 10 வருடங்களுக்குப் பின்னர், இவ்வாறானதொரு பிரேரணையை கொண்டுவந்திருக்கும் தேவையும் ஏற்பட்டிருக்காது என்றார்.
ஐநாவுக்கு பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்தும் சென்றுள்ளனர். அரசாங்க பிரதிநிதிகளும் சென்றிருக்கின்றனர். இந்நிலையில், அவற்றை குழப்புவதற்கென்றே ஒரு குழுவொன்றும் சென்றிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
1948ஆம் ஆண்டு சுதந்திரத்தை கொடுத்தபோது, பிரித்தானிய அரசாங்கம் தமிழர்களுக்கு உரிய சரியான தீர்வை வழங்கியிருந்தால், இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. அவ்வாறு சரியான தீர்வை எடுக்காததன் காரத்தினால்தான் பிரச்சினைகள், சிக்களுக்கு எமது மக்கள் தள்ளப்பட்டள்ளனர் என்றார்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபாயை கொடுத்துவிடுவதன் ஊடாக, பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அரசாங்கம் கண்டறியவேண்டும். யார், யாருக்கு வலி இருக்கின்றதோ? அவர்களுக்குத் தான் பெறுமதி தெரியும். அவர்கள், இருக்கின்றார்களா? இல்லையா? என்பது பிரச்சினை இல்லை. என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக தீர்வை காண்பதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
13 minute ago
20 minute ago
25 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
25 minute ago
30 minute ago