2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

’புதிய அரசமைப்பு மக்கள் அரசமைப்பாக இருக்க வேண்டும்’

Editorial   / 2019 மார்ச் 17 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதியதொரு அரசமைப்பை ​கொண்டு வந்தால் அது மக்களின் அரசமைப்பாக இருக்க வேண்டுமேயன்றி அதனூடாக மதம், இனங்களுக்கிடையிலான பிரிவினைவாதத்தை தூண்டும் அரசமைப்பாக அது இருக்க கூடாதென்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 52 நாள்கள் அரசாங்கம் தொடர்பில் பலரும் குற்றஞ்சுமத்துகின்றனர். எனினும் அதனூடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிருபிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போனதாகத் தெரிவித்த அவர், அந்த குறுகிய காலத்திலும் மக்களுக்கான பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .