2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புதிய தொற்றாளர்கள் குறித்து வெளியான தகவல்

Editorial   / 2020 மே 07 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளர்களாக நேற்று (06) இனங்காணப்பட்ட 29 பேரில் 24 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

ஏனைய 5 பேரில் ஒருவர் யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவரென, அவர் தெரிவித்துள்ளார். 

ஏனைய நால்வரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்களென தெரிவிக்கப்படுகிறது. குறித்த நான்கு பேரில் 07 வயது குழந்தையும் அடங்குவதாக,  விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X