2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

புத்தளம் நகர பிதா கோட்டாவுக்கு ஆதரவு

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜூட் சமந்த, ஹிரன் பிரியங்கர

வெளியிடங்களிலிருந்து  புத்தளம் அருவக்காடு பகுதிக்கு கொண்டுவரப்படும் குப்பைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளதால், தமது ஆதரவை அவருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக,  புத்தளம் நகர பிதா  கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று  (31)இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே,  அவர்  இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், வெளியிடங்களில் இருந்து புத்தளம்-அருவக்காடு பகுதிக்கு  குப்பைகளை கொண்டுவரும் செயற்பாட்டை  நிறுத்தும் வகையில் உறுதிமொழிகளை வழங்கும் வேட்பாளருக்கு, தமது ஆதரவை வழங்கவுள்ளதாக, புத்தளம் மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தானும் அவ்வகையான தீர்மானத்திலேயே உள்ளேன் என்றார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முஸ்லிம்  காங்கிரஸிலில் போட்டியிட்டு, புத்தளம் நகர பிதாவாக  கே.ஏ.பாயிஸ் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .