Editorial / 2025 ஜூன் 10 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பௌத்த மத்திய ஸ்தானத்திற்கு அருகில் திங்கட்கிழமை (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - பாலாவி , ஹஸ்னியா புரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இஸ்மாயில் முஹம்மது ஜமீல் (வயது 56) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்து புத்தளம் நகரில் உள்ள தனது வியாபார நிலையத்திற்கு சென்ற ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிலும், வவுனியாவில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸாருக்கும் , புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, விபத்து இடம்பெற்ற சம்பவ இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை முன்னெடுத்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மத் ஹிஸாம் , ஜனாஸாவை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
குறித்த ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர், விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தீர்ப்பு வழங்கி ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக தனியார் பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 minute ago
39 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
51 minute ago
1 hours ago