2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புலமைப்பரிசில் தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரைக்காலம் வழங்கப்பட்டுவந்த, புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, இதுவரைக்காலம் மாதம் ஒன்றுக்கு  ரூ.500 வழங்கப்பட்டுவந்ததுடன், இந்த தொகையை  750 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த, விசேட தேவையுடைய 250 மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் நிதியை வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .