Editorial / 2026 மார்ச் 24 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தில் இருந்த ஆபரணங்களைத் திருடும் நோக்கில், அவரது கல்லறையைத் தோண்டியதாகக் கூறப்படும் அதிர்ச்சிச் சம்பவம் மொருட்டுவை, லக்ஷபதிய பகுதியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக மொருட்டுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாயின் மறைவுக்குப் பிந்தைய ஏழாம் நாள் தானம் வழங்குவதற்காக, கல்லறைக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்ற முயன்றபோது, இருவர் கல்லறையைத் தோண்டிக் கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார். அவர்கள் இவரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த மயானத்தின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தப்பியோடிய இருவரும் மொருட்டுவை மாநகர சபையின் ஊழியர்கள் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago