Editorial / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-துசித குமார டீ சில்வா
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வவரான ஆதில் பாக்கிரின் பெயரில், பேருவளை நகரில் பெயரிடப்பட்டிருந்த, சுற்றுவட்ட வீதி ஒன்றின், இரண்டு பெயர்ப்பலகைகளை இனம்தெரியாத சிலர் தேசப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பேருவளை நகர சபை தவிசாளர் மசாஹிம் மொஹமட் தெரிவித்தார்.
குறித்த வீதியானது, முன்னர் சுற்றுவட்ட வீதி என்று மாத்திரம் பெயரிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது, பிரதேச மக்களுக்கு முன்கூட்டியே பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், எவரும் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவரும்போத, இவ்வாறான இழிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக, நகரசபை தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026