2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பெற்றோருக்கு பொலிஸார் அறிவுரை

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 11 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்று 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆரம்பமாகிய நிலையில், பிள்ளைகளை பரீட்சை மண்டபங்களுக்குள் அனுப்பி விட்டு, அங்கு கூடி நிற்பதை தவிர்த்து கொள்ளுமாறு பெற்றோருக்கு பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

கொரோனா அச்சத்துக்கு மத்தியில்,  3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இவர்களில் 83 ஆயிரத்து 622 பேர் தமிழ் மொழி மூலமும்  2 இலட்சத்து 48 ஆயிரத்து 72 பேர் சிங்கள மொழி மூலமும் தோற்றுகின்றனர்.

அத்துடன், 2936 பரீட்சை நிலையங்களில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .