2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

‘பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை’

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வெளிநாடுகளிலுள்ள தமது பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக, இலங்கையில் உள்ள பெற்றோர்கள் எந்தவித அசௌகரியங்களையும் உணரத் தேவையில்லையென, வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.

இலங்கையில், கொரோனா வைரஸின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதிலும், மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் கொண்டுள்ள வகிபாகத்தை விளக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், வெளிநாடுகளிலுள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையிலுள்ள பெற்றோர்கள் தெளிவாக அக்கறை கொண்டுள்ளனரெனவும் எனினும், அவர்கள் தமது தூதரகங்களை தொலைபேசி அழைப்பொன்றின் மூலமாக தொடர்பு கொள்ள முடியுமெனவும் கூறினார்.

பாரியதொரு பேரழிவு ஏற்படுமிடத்து, உங்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவுகளை வழங்குமெனத் தெரிவித்த அவர், தொடர்ச்சியாக நிலைமைகளைக் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தயாராக உள்ளதெனவும் கூறினார்.

“இந்த நிலைமை குறைவடைகையில், பொருளாதாரத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக நாங்கள் களம் அமைத்து வருகின்றோம்” எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .