Janu / 2025 ஜூன் 11 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று வெல்லம்பிட்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் 9 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் மிதொடமுல்ல சந்திக்கும் இடையிலான வீதியோரத்தில் அமைந்துள்ள ஒரு வன்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று லொறிகள் இரவு நேரத்தில் குறித்த நிறுவனத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை (11) காலை அதிவேகமாக வந்த பேருந்து, லொறியுடன் மோதியுள்ளது.
இதனால் நிறுத்தப்பட்டிருந்த ஏனைய லொறிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி நான்கு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
32 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago