2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பேலிகொடயில் 500 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலிகொட மீன் வர்த்தக மத்திய நிலைய மீன் வியாபாரிகள், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் 500 பேரை பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரி தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கமைய, இவர்களுக்கு இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தைப் பகுதியில் மீன்களைப் பெற்றுக்கொண்ட பிலியந்தலையைச் சேர்ந்த மீன் வியாபாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதையடுத்து, இந்த பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X