Editorial / 2019 ஜூலை 07 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போதிருக்கும் சிறந்த அரசியல்கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்றும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயமாக, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரே களமிறங்குவாரென, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றல் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேப்போல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் சேர்வதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து எவரும் எந்த நேரத்திலும் வரலாம். நாம் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டுமெனில், மஹிந்த அமரவீரவிடம் நாங்கள் தெரிவிக்க விரும்புவது, மைத்திரிபால சிறிசேன 5 வருடங்களில் ஓய்வுப் பெற்றுச் செல்லும் எண்ணத்திலேயே ஜனாதிபதியானார் என்பதை கூறிக்கொள்கின்றோம்.
நானும் எதிர்பார்ப்பது அவர் ஓய்வுப்பெற்றுச் செல்லும் வரையே எனத் தெரிவித்துள்ள ரொசான் ரணசிங்க பொலன்னறுவையில் சிறிசேன ஆட்சியை நிறைவு செய்துவிட்டு, ரணசிங்க ஆட்சியை ஏற்படுத்துவதையே தானும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago