Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்பமை உரிமை மீறல் மனுவை, நவம்பர் மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (17) தீர்மானித்துள்ளது.
பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட தனக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால்மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்து பூஜித்த ஜயசுந்தரவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன தலைமையிலான மூவரை கொண்ட நீதியசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்பமை உரிமை மீறல் மனுக்கள் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதனையடுத்து, பூஜித் ஜயசுந்தரவின் மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மனுதாரர் தரப்பில் இணக்கம் வெளியிட்ப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மனுவுக்கு எதிராக, மனுவில் நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டு்ள ஜனாதிபதி செயலாளர் சத்தியகடிதமொன்றின் ஊடாக தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்துக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என, குறித்த மனுவில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்ப ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானமானது, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் சமமான பார்த்தல் என்ற அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago