Lenin Raj / 2026 மார்ச் 30 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

வாகனங்களின் தகவல்களை போலியான முறையில் தயாரித்து, சட்டவிரோதமான முறையில் வாகனங்களைப் பதிவு செய்வதற்குத் உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெப் ரக வாகனமொன்றின் செசி இலக்கத்தைத் திருத்தி, அதனை பதிவு செய்தமை மற்றும் அது தொடர்பான முக்கிய கோப்புகளைத் திட்டமிட்டு மறைத்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) தீவிரமாக முன்னெடுத்து வந்த நிலையில், கடந்த 27-ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 28-ஆம் தேதி பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இன்று (30) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் டப்ளியூ.எம்.எம்.ஐ வாசல இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவைப் பிறப்பித்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago