2025 ஜூலை 14, திங்கட்கிழமை

போபிட்டியவில் 10 பொலிஸார் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

போபிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யபட்ட இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.


கைதுசெய்யப்பட்ட 28 வயது இளைஞன் 4ஆம் திகதி இரவு வத்தளை பிரதேச பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து திருடியபோது பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்;.


இதனையடுத்து, தாக்குதல்களால் காயமடைந்திருந்த சந்தேகநபர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .