2025 ஜூலை 14, திங்கட்கிழமை

போலித் தகவல்களை வெளியிட்ட பெண்ணொருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகவலைத்தளம் ஊடாக போலித் தகவல்களை வெளியிட்ட பெண்ணொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (5) கைதுசெய்யப்பட்டுள்ளார்.


வாதுவை – ரஜமல் வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


இலங்கையில் தனிமைப்படுத்தப்படுவர்கள் உரிய முறையில் இலங்கையில் தனிமைப்படுத்தப்படுவதில்லை என்றும் இதனால் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரெனவும் இப் பெண் தகவல்களை வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .