2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மோசடி தொடர்பில் 10 மாதத்தில் 3,200 முறைப்பாடுகள்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு 2015ஆம் ஆண்டின் இதுவரையான 10 மாத காலப்பகுதியில், சுமார் 3,200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழுவின பணிப்பாளர் தில்ருக்ஷி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நேற்று 28ஆம் திகதிவரையில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன், தமக்குக் கிடைக்கப்பெற்ற சகல முறைப்பாடுகளையும் தனிப்பட்ட முறையில் தான் வாசித்து பார்த்ததாகவும் அவர் கூறினார்.

இலஞ்ச, ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு, ஆணைக்குழுவால் மாத்திரம் முடியாதென்றும் அதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் கூறினார். இதேவேளை, முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக தமது ஆணைக்குழுவுக்கு பொலிஸ் அதிகாரிகள் 50 பேரைப் பெற்றுத்தருமாறு நேற்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X