2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மோடி, சுஷ்மா, சோனியா, மன்மோகனை புதுடெல்லியில் சந்தித்து பேசினார் பிரதமர்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இந்தியாவின் ​புதுடெல்லிக்குச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை, நேற்றுப் புதன்கிழமை (05) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்திய உறவுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் ​குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக, பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது,

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலரவம் குறித்து, இந்தியப் பிரதமரிடம், ரணில் விக்கிரமசிங்க எடுத்துரைத்துள்ளார்.  

இரு தரப்பு உறவு, தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் தற்போது இடம்பெற்றுவரும் பதற்றநிலை குறித்தும், இதன்போது ஆலோசனை நடத்தப்பட்டதாக, மேற்படி  தகவல்கள் தெரிவிக்கின்றன.  

முன்னதாக, இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல்நலக்குறைவால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் சந்தித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர்களுடனும், இலங்கை - இந்திய உறவு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  

 இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, ​நேற்றுச் சந்தித்த பிரதமர், இரு நாடுகளின் உறவுப் பலப்படுத்துவது தொடர்பில், தீர்க்கமாகக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .