Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 04 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறவிருந்த “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” என்ற செயற்றிட்டத்தின் பிராந்திய அலுவலகத் திறப்பு விழாவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவிருந்த போதிலும், இன்று ஏற்படக்கூடிய அரசியல் பதற்ற நிலைமையைக் கருத்திற்கொண்டு, அவரது பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 10 பேர், அதிலிருந்து விலகி, ஒன்றிணைந்த எதிரணியில் இன்று இணையவுள்ளனர் என, முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டால், அரசாங்கத்திலும் கட்சியிலும் ஏற்படக்கூடிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டே, இந்தப் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவால் நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்ட ஊடக வெளியீட்டில், “யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ செயற்றிட்டத்தின் பிராந்திய அலுவலகத் திறப்பு நிகழ்வு, தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டில், பிரத்தியேக கூட்டமொன்று, இரவு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இராப்போசனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்வார் என, தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன. அதை உறுதிப்படுத்துவதற்காக, அமைச்சர் அமரவீரவைத் தொடர்புகொள்ள முயன்றபோதும், அவரது மெய்ப்பாதுகாவலர் மாத்திரம் அழைப்பை ஏற்றுக்கொண்டு, கூட்டம் இடம்பெறுகிறது என்பதை மாத்திரம், நேற்று இரவு உறுதிப்படுத்தினார்.
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago