2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாதிவல டெங்கு பண்ணை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவல உத்தியோகபூர்வ வாசஸ்தலம், டெங்கு நுளம்புகள் உற்பத்திசெய்யப்படும் பண்ணையாக இருப்பதாகவும், டெங்கு ஒழிப்பு அதிகாரிகள், அவை தொடர்பில் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவே இவ்வாறு முறையிட்டுள்ளார்.

அந்த வாசஸ்தலப்பகுதியில் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட 15 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தன்னுடைய மனைவியும், பிள்ளைகளும் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கழிவுகளை வெளியேற்றுவதில் முறையான செயற்பாடுகள் இன்மையால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு வந்த போதிலும் அவர்கள் முறையான நடவடிக்கை எடுக்காமையால் தான், இவை தொடர்பில் சபாநாயகரிடம் முறையிட்டதாக ரஞ்சித் எம்.பி தெரிவித்தார்.

மாதிவல நாடாளுமன்ற வீட்டுத்தொகுதியில் 225 வீடுகள் இருப்பதுடன் அதனை நாடாளுமன்ற பாராமரிப்பு பிரிவை, அந்த வீட்டுத்தொகுதியையும் பாராமரிக்கின்றது என்பதுடன் அங்கு 1,000 பேர் வசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X