Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தற்போது இலகு நிபந்தனை பொருளாதார முறைமை காணப்படுவதுடன், வெளிநாட்டு முதலீடுகளுக்கான வசதிகள் வழங்கும் முறைமையொன்றும் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) முற்பகல் பாங்கொக் நகரில் இடம்பெற்ற இலங்கை மற்றும் தாய்லாந்து வியாபார சம்மேளன மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இருநாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள முதலீட்டு முறைகளை சிறப்பாக இனங்காண வேண்டியதுடன், அவற்றுள் பிரதானமாக விவசாய உற்பத்திகள், சுற்றுலாத்துறை மேம்பாடு என்பன உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நிலையான அபிவிருத்திக்கு உறுதியான வேலைத்திட்டமொன்று காணப்பட வேண்டியதுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய சந்தை வழிநடத்தப்பட வேண்டுமென்று தாய்லாந்தின் துணைப்பிரதமர் Somkid Jatusripitak தெரிவித்தார்.
அவ்வாறே நிலையான அபிவிருத்தியை இருநாடுகளும் இணைந்து வெற்றியடைச் செய்ய வேண்டும் எனவும் தாய்லாந்தின் துணைப்பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் தாய்லாந்து வியாபாரிகள் சிலர் கலந்துகொண்டதுடன், தாய் - ஸ்ரீலங்கா வியாபார சங்கத்தினால் ஜனாதிபதிக்கு நினைவுச்சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இதனோடு இணைந்ததாக தாய்லாந்து வியாபாரிகள் சிலரும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அதன்போது இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தம் நோக்கில் இலங்கையில் ஹோட்டல்கள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மீன்பிடி மற்றும் சீனிக் கைத்தொழிலை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தாய்லாந்து வியாபாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
அத்தோடு, மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதில் தமது பங்களிப்பை வழங்குவதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இங்கு தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே ஆகியோரும் கருத்துத்தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட சமாதி புத்தரின் மாதிரி உருவச்சிலையொன்றும் தாய்லாந்தின் அவுத்தியா பிரதேசத்தில் அமைந்துள்ள தம்மளான் விகாரையில் நிறுவும் நிகழ்வும் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .