Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 10 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு றோயல் கல்லூரியில் முதலாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என, கல்வியமைச்சின் தகவல் தெரிவிக்கின்றது.
முதலாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையின் போது, பல்வேறான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவென, இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறான தரப்புகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் இந்தக் கல்லூரி உள்ளிட்ட, இன்னும் சில பாடசாலைகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவனம், கல்வியமைச்சின் செயலாளருக்கு கடந்தவாரம் பணித்திருந்தார்.
முதலாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் உற்சவம், நாடளாவிய ரீதியில் நாளை 11ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும், றோயல் கல்லூரியில் முதலாம் தரத்துக்கு மாணவர்களைக் சேர்த்துக்கொள்வதற்காக இடம்பெறவிருந்த உற்சவம் தொடர்பில் எவையும் குறிப்பிடப்படவில்லை.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago