2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மின்சக்தி அமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு தடை

Menaka Mookandi   / 2016 மார்ச் 16 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இவ்வாரத்தில் மேற்கொள்ளவிருந்த தனிப்பட்ட ரீதியிலான வெளிநாட்டுப் பயணத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தடை விதித்துள்ளார்.

நாட்டுக்குள் மின்தடைப் பிரச்சினையொன்று உருவாகியுள்ள நிலையில், மின்சக்தி அமைச்சர் வெளிநாடு செல்வது உகந்ததல்ல என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வமைச்சரிடம் கூறியுள்ளார்.

இதற்கமைய, அமைச்சரது வெளிநாட்டுப் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, தான் இந்தப் பயணத்தை ஏற்கெனவே இரத்து செய்யவிருந்ததாக அமைச்சர் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .