Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றிய அதிகாரிகள், அரசியல் நடவடிக்கையில் ஈடுப்பட்டமை தொடர்பில், முன்னாள் படைத் தளபதிகள் நால்வர் உட்பட ஐந்து பேரிடம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, முன்னாள் இராணுவ தளபதியும் தாய்லாந்துக்காக முன்னாள் இலங்கை தூதுவருமான ஷாந்த கொட்டேகொடவிடம் கடந்த 12ஆம் திகதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன். முன்னாள் விமானப்படை தளபதியும் பாகிஸ்தானுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகருமான ஜயலத் வீரக்கொடியிடமும் அன்றையத் தினம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜப்பானுக்கான முன்னாள் தூதுவரும் முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கருணாகொட மற்றும் முன்னாள் கடற்படை தளபதியுடம் அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகருமான திஸர சமரசிங்க ஆகிய இருவரும் 13ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் குமார விஜயசிறியிடம் நேற்று புதன்கிழமை (14), நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
28 minute ago
36 minute ago