Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 15 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
14ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவங்கள் தொடர்பில் தெரியவருவதாவது,
நுவரெலியா
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகல பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளின் சாரதி, முச்சக்கரவண்டியில் மோதி, பஸ்ஸின் சில்லில் நசுகுண்டு உயிரிழந்துள்ளான்.
மோட்டார் சைக்கிள், முன்னால் சென்றுகொண்டிருந்த பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் சாரதி, பின்னால் வந்த பஸ்ஸின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை (14) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் பதுளையைச் சேர்ந்த ரவிந்து மிச்சக ரத்நாயக்க (வயது 26) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து பஸ்வண்டியின் சாரதியைப் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காலி
கொழும்பு, காலி பிரதான வீதியில் களுவெல்லயிலிருந்து காலி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, பாதையை கடக்க முற்பட்ட பாதசாரியை மோதி விபத்துக்குள்ளதில் பாதசாரி உயிரிழந்துள்ளார். விபத்தில் காயங்களுக்குள்ளான சாரதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை(14) இரவு 8.10 மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், கொஸ்லந்த பகுதியைச் சேர்ந்;த சுந்தரம் தங்கராசா (வயது 68) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
ஜா-எல
கொழும்பு நோக்கி பயணித்த வானொன்று சிலாபம்-கொழும்பு வீதியில் தடுகமையில் வைத்து வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரியை மோதி விபத்துக்குள்ளனதில் பாதசாரி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை (14) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் பமுணுகம பகுதியைச் சேர்ந்த ரோய் எட்வட் (வயது 47) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் ராகம வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியைப் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
35 minute ago