2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாலைத்தீவு பிரஜையின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 07 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவு பிரஜையான ஹுசைன் ரஸுன் என்பவரின் சடலம், வெட்டுக்காயங்களுடன், நேற்று வெள்ளிக்கிழமை (06) பிலியந்தலை பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாலைத்தீவில் கொலைக்குற்றங்களுடன் தொடர்புடையவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2007ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைக் குற்றச்சாட்டில் மாலைத்தீவு பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், 2010ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் மீண்டும் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

கொலை செய்யப்பட்ட நபர், பெப்பிலியன பிரதேசத்தில் வசித்து, வியாபாரமொன்றில் ஈடுபட்டு வந்தவேளையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

எனினும், மாலைத்தீவு தூதரகம் இது தொடர்பான எவ்வித உத்தியோகபூர்வ தகவலையும் வெளியிடவில்லை. 

இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, இக்கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X