2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாலைதீவில் கைதுசெய்யப்பட்ட ஸ்னைபர் துப்பாக்கிதாரி இராணுவ வீரர் அல்ல

George   / 2015 நவம்பர் 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத் தீவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் ஸ்னைபர் துப்பாக்கி பிரிவைச் சேர்ந்தவர் இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைய குறித்த நபர், இலங்கை முப்படைகளை சேர்ந்தவர் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இலங்கை சினைபர் துப்பாக்கிதாரி ஒருவர் மாலைத்தீவு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

அத்துடன், குறித்த நபர் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர் என அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X