Editorial / 2026 மார்ச் 27 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 'கென்ட் ரெசிடென்ஸ்' (Kent Residence) வீடமைப்பு வளாகத்தின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த சீனப் பெண் ஒருவர் கத்தியால் கடந்த 2026.03.23 அன்று குத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து கல்கிசை கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இப்படுகொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் முன்னாள் காதலரான சீன நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபரின் விபரங்கள்:பெயர்: வாங் ஹுயுயின் (WANG HUIYIN)
பிறந்த திகதி: 2000.06.01
கடவுச்சீட்டு இலக்கங்கள்: EE6791329 / ER3805969
அடையாளம்: சந்தேக நபரின் இடது கை விரல்களில் காயம் ஏற்பட்டு தையல்கள் (Stitches) இடப்பட்டுள்ளன.
இந்தச் சீன சந்தேக நபர் தொடர்பான புகைப்படம் ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்:
பொறுப்பதிகாரி, கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு - கல்கிசை: 071-8596408
பொறுப்பதிகாரி, கொஹுவலை பொலிஸ் நிலையம்: 071-8591669
6 hours ago
9 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
27 Mar 2026