2025 ஜூலை 28, திங்கட்கிழமை

மாடியில் இருந்து விழுந்த பாதுகாப்பு அதிகாரி மரணம்

Editorial   / 2025 ஜூலை 28 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு ஒரு கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பீடத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இரண்டு மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து பாதுகாப்பு அதிகாரி கீழே விழுந்ததாகவும், கட்டிடத்திற்கு அருகில் கிடந்த அவரது உடல் காலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட தர்மசீலன் ரகுராஜ் (34) ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டிருந்தார். விபத்துக்கான சூழ்நிலைகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .