2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மத்தலயில் மான் வேட்டை

Menaka Mookandi   / 2016 மார்ச் 16 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தல விமான நிலைய ஓடுபாதையில் நிலைகொண்டுள்ள மான்களை விரட்டுவதற்காக, இன்று (16) காலை விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வனவிலங்குகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் அடங்கிய 300பேர், இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விமான நிலைய ஓடுபாதையில் சுமார் 15 மான்கள் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், விமான நிலையத்தைப் பார்வையிடச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு நிலைகொண்டுள்ள மான்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிய ரிகளுக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .