2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மதுக்கொடுத்து நகைகளை அபகரித்த பெண்

Editorial   / 2022 ஜூன் 12 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேஸ்புக்கின் மூலம் நண்பர்களாகிய இருவரும், விடுதியொன்றுக்குச் சென்றுள்ளனர். அங்குவந்த ஆண் நண்பருக்கு, மதுபானத்தை கொடுத்த பெண் நண்பி, அவர் போதையில் இருந்த சமயத்தைப் பார்த்து, பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை ​அபகரித்து சென்றுள்ள சம்பவமொன்று திஸ்ஸமஹாராகமையில் இடம்பெற்றுள்ளது.

ஆண் நண்பரிடமிருந்து 15 பவுண் நகைகள் மற்றும் அவரிடமிருந்த பணம் அவ்வளவையும் சுருட்டிக்கொண்டு அப்பெண் தலைமறைவாகிவிட்டார். அபகரித்துச் சென்ற நகைகளின் பெறுமதி 27 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆண் நண்பர் வந்திருந்த காரையும் எடுத்துச் சென்ற அப்பெண், அக்காரை திஸ்ஸவாவிக்கு அருகில் நிறுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவரை இவ்வாறு ஏமாற்றியுள்ளார் என அறியமுடிகின்றது. கொரியாவுக்கு வேலைக்குச் சென்று, கடந்த இரண்டொரு நாட்களில் நாடு திரும்பிய நபரிடமே இவ்வாறு நகைகள், பணம் அபகரிக்கப்பட்டுள்ளன என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .