2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

முந்தலம் விபத்தில் மூவர் பலி

Editorial   / 2026 ஜனவரி 12 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியில் முந்தலம், நவடன்குளம் பகுதியில் திங்கட்கிழமை (12) அன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரும் வேனும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்தனர்.

காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .