Princiya Dixci / 2017 ஏப்ரல் 17 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - புறக்கோட்டை மனிங் சந்தையினை அங்கிருந்து அகற்றி, பேலியகொடையில் மீள அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைத் திட்டங்கள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம், எதிர்வரும் ஜூன் மாதமளவில், பேலியகொடை மனிங் சந்தையை, மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் அத்திபார நிர்மாணத்துக்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பேரில் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பேலியகொடை மனிங் சந்தையை நிர்மாணிப்பதற்கு, அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த சந்தைத் தொகுதியின் 90 சதவீதமான பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புறக்கோட்டையிலுள்ள மனிங் சந்தை, பேலியகொடைக்கு இடம்மாற்றப்படுவதினால், புறக்கோட்டையில் தினசரி காலை வேளைகளில் ஏற்படும் வாகன நெரிசல்கள் பெருமளவில் குறைய வழி ஏற்படுவதுடன், வெளி மாவட்டங்களிலிருந்து மரக்கறி வகைகளை ஏற்றிவரும் லொறிகளினால் ஏற்படும் நெரிசல்களும், 100 சதவீதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
13 minute ago
24 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
33 minute ago