2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மாம்பழ மூதாட்டியை ஏமாற்றிய பெண் கைது

Janu   / 2026 மே 03 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை திருவொற்றியூர் மார்க்கெட்டில் பழவியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஜெயலட்சுமி (67). புற்றுநோயால் கணவனை இழந்து, தானும் சர்க்கரை நோய் பாதிப்புடன் போராடி வரும் இவர், பிழைப்பிற்காக அங்கு மாம்பழம் விற்று வருகிறார்.

சம்பவத்தன்று பெண் ஒருவர் இவரிடம் வந்து, சிறுவர்கள் விளையாடும் "போலி 500 ரூபாய்" நோட்டைக் கொடுத்து, 150 ரூபாய்க்கு மாம்பழம் வாங்கினார். பின்னர், மீதிப் பணமான 350 ரூபாயையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரம் கழித்து அந்த நோட்டுப் போலி என அறிந்த ஜெயலட்சுமி, ஏமாற்றப்பட்ட அதிர்ச்சியில் கண்கலங்கினார்.

இது குறித்த புகாரின் பேரில், கண்காணிப்புக் கேமரா   காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார்  எர்ணாவூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (35) என்பவரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர், "குழந்தைகள் விளையாட வைத்திருந்த நோட்டு எனத் தெரியாமல் கொடுத்துவிட்டேன்," எனக் கூறினார்.

இருப்பினும், இச்சம்பவம் குறித்த செய்தி பரவியதும் பயந்துபோன அவர், இரவோடு இரவாக வீடு மாறியது பொலிஸ் விசாரணையில் அம்பலமானது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த பொலிஸார், பின்னர் காவல் நிலையப் பிணையில் அவரை விடுவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .