2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மயிலிட்டியில் பதற்றம்: பொலிஸார் அடாவடி: தூஷணத்தால் திட்டி முதுகில் பிடித்து தள்ளினர்

Editorial   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று (01) காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி அனுர குமார  திசாநாயக்க வருகைதந்தார்.

இதன்போது அப்பகுதியில் கூடியிருந்த, காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அப்பகுதியில் நிற்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டனர்.

வயோதிபர்கள் எனவும் பாராது  தூஷண வார்த்தைகளால் ஏசி பொலிஸார்,  முதுகில் பிடித்து தள்ளினர்.

பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மயிலிட்டிக்கு வருகை தந்திருந்தார்.

கடந்த காலங்களில் ஜனநாயகம் பற்றி அதிகம் பேசிய அனுர குமார திசாநாயக்கவின் ஆட்சியிலும் பொலிஸார் கடந்த காலங்களை போன்று மூர்க்கத்தனமாக செயற்பட்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .