2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

மரப்பலகையால் ஆன வாக்குப்பெட்டிகளின் பாவனை குறைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 27 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு மரப்பலகையால் ஆன வாக்குப்பெட்டிகளின் பாவனையை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

400 வாக்குகளுக்கும் குறைவான வாக்கெடுப்பு நிலையங்களுக்கு மாத்திரம் மரப்பரகையால் ஆன வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்  ஸ்ரீ ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அவ்வாறான வாக்கெடுப்பு நிலையங்களின் எண்ணிக்கை 340 ஆகும்.

இதேவேளை,  இம்முறை தேர்தலுக்கான ஹாட்போட் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 10,000 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

800, 1500 மற்றும் 2500 வாக்குகளை கொள்ளக்கூடியதாக மூன்று பிரிவுகளில் இந்த வாக்குப்பெட்டிகள் தயாரிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது.

எவ்வாறாயினும், வமக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் வாக்கெடுப்பு நிலையங்களுக்காக இதற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் வாக்குப்பெட்டிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்  ஸ்ரீ ரத்னபிரிய  கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .