2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மரம் வெட்டிய பெண்; மின்சாரம் தாக்கிப் பலி

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவபரணகம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மரக்கிளையொன்று வெட்டிக்கொண்டிருந்த போது, மின்வடத்திலிருந்து மின்சாரம் தாக்கிய பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஊவபரணகம பொலிஸார் தெரிவித்தனர். 

டவுன்சயிடி வத்த பகுதியைச் சேர்ந்த சரேய்மதி (49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

அதிக மழை காரணமாக சரிந்து விழும் அபாயம் தெரிந்த மரத்தின் கிளையொன்றை வெட்டிக்கொண்டிருந்த போது, அருகிலிருந்த மின்வடத்திலிருந்து மின்சாரம் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என ஊவபரணகம பொலிஸார் தெரிவித்தனர். 

ஊவபரணகம பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X