Editorial / 2019 ஜனவரி 25 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது மலையக மக்கள், இந்த நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள் எனத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, அவர்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தில், தமிழர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டுமென அழைப்பு
விடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மலையக மக்கள், ஒரு தேசிய இனம். தவிர, அவர்கள் ஒன்றும் தீண்டத்தகாத இனமல்ல என்றும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி, அவர்களை வாழவைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
மலையக மக்களே, எமது நாட்டின் முதுகெலும்பு. மலையகத்தின் பிரதான உரித்தாளர்கள் என்று குறிப்பிட்ட அவர், அவர்களை இந்திய மக்களென பாகுபாடு படுத்தினால், இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்திய வம்சாவளியினர் தான். இலங்கையில் ஒரு சில குழுக்களை தவிர அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் என்றார்.
ஆகவே இந்த பாகுபாட்டை கைவிட வேண்டும். மலையகத்தில் வாழும் தமிழர் இந்திய வம்சாவளியினர் என்ற கருத்தை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டோம் என்று குறிப்பிட்ட அவர், எனினும் வடக்கில் வன்னி, கிளிநொச்சி பகுதிகளில் ஆரம்பத்தில் குடியேற்றப்பட்ட மக்களை மலையக மக்கள் என்ற வர்க்க பாகுப்பாடடை காட்டி, அவர்கள் தனி ஓர் இனமாக காண்பிப்பதற்கு ஒருசில அரசியல் வாதிகளினால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன இது மிகவும் மோசமான நிலைமையாகும் என்றார்.
ஆயிரம் ரூபாய் போராட்டத்தில் அவர்களுடன் கைகோர்க்க வேண்டிய கடமை, பொறுப்பு எமக்கு உள்ளது. அவர்களின் நியாயமாக கோரிக்கையை பெற்றுக்கொடுக்க அவர்களுடன் நாம் கைகோர்க்க வேண்டும். மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்றுத் தெரிவித்த அவர், அவர்களின் போராட்டத்தில் நாம் ஆதரவு வழங்கி அவர்களை வாழ வைக்க வேண்டும், போராட்டங்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என எமது மறைந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மலையக மக்களின் போரட்டங்களில் எமது ஆதரவு நிச்சயமாக இருக்கும். ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்கும் முயற்சிக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளது. தாமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என சபை முதல்வர் தெரிவித்துள்ளார். ஆகவே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும். இன்று விலை வாசி அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி வாழ்வாதாரத்தை சார்ந்ததாக உள்ளது. இவர்களின் இந்த போராட்டமும் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டமாகவே கருதப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025