2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மஹிந்த உட்பட எழுவரின் வழக்கு: ஆதாரம் சேகரிக்க இ.போ.சவுக்கு அவகாசம்

Gavitha   / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 14 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழுபேருக்கு எதிராக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாகக் கூடுதல் ஆதாரங்களைச் சேர்ப்பதற்குரிய நாளாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஷிராணி குணரத்ன நவம்பர் 11ஆம் திகதியை நிர்ணயித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போது ஜனாதிபதி வேட்பாளராகவிருந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்களைக் கொண்டுசெல்லவே இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட்டன.

இலங்கைப் போக்குவரத்துச் சபை, இந்த வழக்கை சோமரத்ன அசோசியேட் ஊடாக தாக்கல் செய்திருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் குழு உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ஷ, சுசில் பிரேம ஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் காமினி செனரத் ஆகியோர் உட்பட எழுவரை, இலங்கை போக்குவரத்துச் சபை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X