2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மஹிந்த எம்.பி.யின் பாதுகாப்பு வாகன விபத்து: சாரதிக்குப் பிணை

Gavitha   / 2015 நவம்பர் 04 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவு வாகனம் விபத்துக்குள்ளானதுடன் தொடர்புடைய சாரதியான  இராணுவ வீரர் நிரோஷன் சேனாதீரவை, 5,000 ரூபாய் பெறுமதியான தனிப்பட்ட பிணையில் செல்ல எல்பிட்டிய மேலதிக நீதவான் முனிதாஸ ஹல்பந்தெனிய, நேற்று செவ்வாய்க்கிழமை(03) உத்தரவிட்டார்.

ஒரு பெண் உட்பட இருவர் படுகாயமடைந்து எல்பிட்டிய தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக,  நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(01) மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் வாகனம், மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, மரண வீடொன்றுக்குச் செல்வதற்காக பொரவாகமைக்குச் சென்றுகொண்டிருந்த போது, எல்பிட்டிய, கெல்லபத்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X