2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மஹிந்தவின் 2ஆம் பதவிக்காலத்தில் கடத்தல்கள் 'பூச்சியம்'

Kanagaraj   / 2016 மார்ச் 10 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்தின்போது, வெள்ளை வான்களின் மூலம் எந்தவொரு ஊடகவியலாளரும் கடத்தப்படவில்லை என்று, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூலம் விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது அவைக்கு  ஆற்றுப்படுத்திய பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

2010.01.26 முதல் 2015.01.08 வரையிலான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் பதவிக்காலத்தில், வெள்ளை வான்களின் மூலம் கடத்திச்செல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் மற்றும் கட்டத்தப்பட்ட திகதிகள்,  வெள்ளை வான்களில் தான் கடத்தப்பட்டனர் என்பதற்கான திட்டமிட்ட சாட்சிகள் யாவை உள்ளிட்ட கேள்விகளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில கேட்டிருந்தார்.

உதயன் கம்மன்வில எம்.பி அவைக்கு நேற்று சமூகமளிக்காத நிலையில், அக்கேள்வியை கூட்டு எதிரணியின் எம்.பி.யான  ரோஹித்த அபேகுணவர்தன கேட்டிருந்தார்.

அதற்கிணங்க, அமைச்சு சமர்ப்பித்த பதிலில், அக்காலப்பகுதிக்குள் எந்தவொரு ஊடகவியலாளரும் கடத்தப்படவில்லை என்பதனால் இதர கேள்விகள் ஏற்புடையதல்ல என்று குறிப்பிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .