2025 மே 19, திங்கட்கிழமை

மஹிந்தவின் ஊடகச் செயலாளர் வாக்குமூலம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் ரோஹண வெலிவிடமிருந்து வாக்குமூலமொன்றை பெறுவதற்காக,  இன்று செவ்வாய்க்கிழமை (20) அவர் ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தார் .

ஜனாதிபதி ஊடகப்பிரிவிலிருந்த பல காணொளிகள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவர் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18), இது தொடர்பிலான வாக்குமூலத்தை பெறுவதற்கு, ஹோமாகம பொலிஸார் ரோஹண வெலிவிடவின் வீட்டுக்கு சென்றிருந்தனர். எனினும் அந்த நேரத்தில் அவர் அங்கு இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X