2026 மே 15, வெள்ளிக்கிழமை

மஹர கைதிகளுக்கு எதிராக வழக்கு

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சம்பவத்துடன் தொடர்புடைய சகல கைதிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து இனங்காணப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இதுவரை 25க்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தால் சிறைச்சாலை சொத்துகளுக்கு அதிகம் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மதிப்பீடு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .