Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட “யாதுரிமைப் பேராணை மனு” தொடர்பான தீர்ப்பு, இன்று (03) பிற்பகல் 3 மணிக்கு வழங்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, ஒரு நீதிப்பேராணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே, மேற்படி யாதுரிமைப் பேராணை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, கடந்த வௌ்ளிக்கிழமையன்று (30) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக, மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிற்பகல் 3 மணிக்கு, மீண்டும் இந்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அப்போதே, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனவும் நீதிமன்றம் அறிவித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில், இந்த மனு பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago