2025 மே 03, சனிக்கிழமை

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு; நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு

Editorial   / 2018 ஜூலை 09 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கிலிருந்து நீதிபதி கிஹான் குலதுங்கவை நீக்கி, வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரணைகளை நடத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய, வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற பிரதான நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அது மேலதிக விசாரணைக்காக நீதிபதி விக்கும் களுஆராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், இந்த வழக்கினை விசாரணை செய்ய தமக்கு முடியாது என  நீதிபதி தெரிவித்தார். இதனால் வழக்கினை விசாரிக்க நீதிபதி சம்பத் அபேகோன் நியமிக்கப்பட்டார்.

எனினும், வழக்கு விசாரணை நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதும், மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி முன்னெடுப்பதாகத் தெரிவித்து நீதிபதி வழக்கினை ஒத்திவைத்தார்.

மஹிந்தானந்த அலுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபாய் பணத்தின் மூலம், கொழும்பு, கிங்ஸி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X