2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் நிதிக்குற்றவியல் பிரிவால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிணை நிபந்தணைகளை ஒப்புக்கொள்ளாமையால் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்தானந்தவுக்கு 35,000 ரூபாய் ரொக்கப் பிணையும், தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணை இரண்டிலும் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், அவரது வெளிநாட்டு பயணங்களுக்கும் நீதவான் தடைவிதித்ததுடன், அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

எனினும், நீதிமன்ற பிணை நிபந்தனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஒப்புக்கொள்ள மறுத்ததால்,அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X